Thursday, 28 April 2016

வரங்களை கையாள

நம் பிள்ளைகள் நமது வரம். வரங்களை சரியாக பயன் படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது.
என் வீட்டுப் பக்கத்தில ஒரு அம்மா தன் குழந்தையை வளர்க்கும் விரம் சொல்லி மாளாது.
எந்நேரமும் படி படி என்று சொல்லிக் கொண்டிருப்பார். சக மனிதர்களோடு அவனை ஒப்பிட்டு ஒப்பிட்டு அவனுக்கு அந்த ஒப்பிடுதல் தான் மனதில் இருக்கே ஒழிய படிக்கணும்ங்கற ஆர்வம் வரவே இல்லை.
பொறாமை குணம் மட்டுமே தலை தூக்கியது. விளைவு சக நண்பர்கள் வெற்றி பெற்றால் அவர்களை பற்றி கெட்டதாக சொல்ல ஆரம்பித்து நண்பர்களின் பெற்றவர்கள் நடத்தை வரை கேவலமாக பேச ஆரம்பித்தான். படிப்பை விட வாழ்க்கையில் தோற்றுப் போனான்.

இன்னும் அப்படி தான் அவன் அம்மா இருக்கிறார். பிள்ளை மனதில் நஞ்சை கலந்து கொண்டே.

குழந்தை வளர்ப்பு





குழந்தைகள் பூ போல. பூவை எப்படி கையாள்கிறோமோ அப்படியே அவர்களும். அழகாய் மலர்ந்த பூவை கையால் பறித்துக் கசக்கி முகர்கிறோமா என்ன. அப்படிப்பட்ட மலரினும் மெல்லிய குழந்தைகளை அடிப்பதும் துன்புறுத்துவதும் என்ன நியாயம்.

நீ முன்னால் பிறந்ததால் அவர்களுக்கு தாயாகவோ தந்தையாகவோ இருக்கிறாய். அவ்வளவே. சில பல வருடங்கள் மூத்தவர்கள் என்பதால் நமக்கு பிறந்த பிள்ளைகள் நம் அடிமைகளா என்ன? 

அன்பைக் கொடுத்து அன்பை விதைப்போம்.
பண்பாய் நடந்து பாதை அமைப்போம்