Tuesday, 13 September 2016

பால் சுத்தமாச்சு!

நல்ல பசி. கையில் எதுவும் கொண்டு செல்ல வில்லை.நடக்க நடக்க தூரம் பெரிதாகி கொண்டே வருகிறது.

பசியில் என்ன செய்வோம்? பார்வையில் படும் கடைகளில் நுழைவோம்.

அப்படி ஒரு நபரை பார்வையிட நேர்ந்தது. வேளாங்கன்னி கோவில் பெசண்ட் நகரில் உள்ளது. அதன் திருவிழாவுக்காக மக்கள் திரள் திரளாக நடந்து கொண்டிருந்தனர்.

அதில் ஒரு கூட்டம் ஒரு கடையை முற்றுகை இட்டது. நடந்து கொண்டே இருப்பவர்கள் பெரிய ஹோட்டலுக்கா போக முடியும்? வழியில் தென்பட்ட சிறு ஹோட்டல் ஒன்றே அது.

பக்காவாய் 10 காபி ஆர்டர் செய்தார்கள்.  நல்ல ஷெட் தான் கடை. ரோட்டோரம் இருந்தது. ஒருபக்கம் சுடசுட பரோட்டா, ஆம்லட் என வியாபாரம். ஒருபக்கம் டீ , காபி, வடை வியாபாரம்.

முன் பின் தவிர இரு புறமும் திறந்த வெளி.  அதில் ஒரு பெரிய பேரல் நிறைய தண்ணீர். அதுவும் திறந்து கிடக்கிறது. அதன் மேல்புறம் அத்தனை கொசுக்கள். அதன் அருகில் ஒரு ஆள் அவசரக் கடனை கழித்துக் கொண்டிருந்தார்.

ஏனப்பா! போடு பத்து காபி ! குரல் வந்தவுடன் கடன் கழித்த நபர் கால் கழுவாமலேயே கீழே கிடந்த பிளாஸ்டிக் மக் எடுத்து திறந்து கிடந்த தண்ணீரை முகண்டு உள் நுழைந்து பாலில் சேர்த்து கொதிக்க விடுகிறார்.

👹👹👹

பால் சுத்தமாச்சு!

Thursday, 28 April 2016

வரங்களை கையாள

நம் பிள்ளைகள் நமது வரம். வரங்களை சரியாக பயன் படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது.
என் வீட்டுப் பக்கத்தில ஒரு அம்மா தன் குழந்தையை வளர்க்கும் விரம் சொல்லி மாளாது.
எந்நேரமும் படி படி என்று சொல்லிக் கொண்டிருப்பார். சக மனிதர்களோடு அவனை ஒப்பிட்டு ஒப்பிட்டு அவனுக்கு அந்த ஒப்பிடுதல் தான் மனதில் இருக்கே ஒழிய படிக்கணும்ங்கற ஆர்வம் வரவே இல்லை.
பொறாமை குணம் மட்டுமே தலை தூக்கியது. விளைவு சக நண்பர்கள் வெற்றி பெற்றால் அவர்களை பற்றி கெட்டதாக சொல்ல ஆரம்பித்து நண்பர்களின் பெற்றவர்கள் நடத்தை வரை கேவலமாக பேச ஆரம்பித்தான். படிப்பை விட வாழ்க்கையில் தோற்றுப் போனான்.

இன்னும் அப்படி தான் அவன் அம்மா இருக்கிறார். பிள்ளை மனதில் நஞ்சை கலந்து கொண்டே.

குழந்தை வளர்ப்பு





குழந்தைகள் பூ போல. பூவை எப்படி கையாள்கிறோமோ அப்படியே அவர்களும். அழகாய் மலர்ந்த பூவை கையால் பறித்துக் கசக்கி முகர்கிறோமா என்ன. அப்படிப்பட்ட மலரினும் மெல்லிய குழந்தைகளை அடிப்பதும் துன்புறுத்துவதும் என்ன நியாயம்.

நீ முன்னால் பிறந்ததால் அவர்களுக்கு தாயாகவோ தந்தையாகவோ இருக்கிறாய். அவ்வளவே. சில பல வருடங்கள் மூத்தவர்கள் என்பதால் நமக்கு பிறந்த பிள்ளைகள் நம் அடிமைகளா என்ன? 

அன்பைக் கொடுத்து அன்பை விதைப்போம்.
பண்பாய் நடந்து பாதை அமைப்போம்